பெண்மீது தாக்குதல்; 2-வது கணவர் கைது

அன்னூரில் பெண்ணை தாக்கிய 2-வது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Update: 2022-06-11 17:54 GMT

அன்னூர்

கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம்.காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (30). இவர் அங்குள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் முத்துலட்சுமி தனது கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தியை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.அதனால் முத்துலட்சுமிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு கடந்த ஒரு வாரமாக கேட்டு வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை தாக்கியுள்ளார்.இதனை பார்த்த முத்துலட்சுமியின் தாயார் அங்கு வந்து கிருஷ்ணமூர்த்தியை தடுத்துள்ளார்.அப்போது, அவரையும் தாக்கியுள்ளார்.பின்னர், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இதே போன்று கிருஷ்ணமூர்த்தியும் தனது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக புகாரளித்துள்ளார்.இதையடுத்து போலீசார் முத்துலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்