பொள்ளாச்சி அருகே மனைவியின் கள்ளக்காதலன் மீது தாக்குதல்-கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி அருகே மனைவியின் கள்ளக்காதலன் மீது தாக்குதல்= கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Update: 2023-06-15 19:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் வீட்டில் கட்டுமான பணியை மேற்கொண்டார். அப்போது அந்த என்ஜினீயருக்கும், மெக்கானிக்கின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் அக்கம், பக்கத்தினர் மூலம் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மனைவியை கண்டித்தார். இதனால் அந்த இளம்பெண் கணவரை பிரிந்து கள்ளக்காதலுடன் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று புளியம்பட்டி ரோட்டில் அந்த என்ஜினீயர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மெக்கானிக் தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அந்த என்ஜினீயரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் மெக்கானிக் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்