கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ரத்தினபுரி
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தேவி (27). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அஜித்குமாருக்கு தனது உறவுக்கார இளம்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த தேவி, தனது கணவரிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தேவி சிவகாசி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் கணவன்-மனைவியை அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர்.
கள்ளக்காதல்
பின்னர் அஜித்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவை வந்தார். பின்னர் அவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அவர் மீண்டும் தனது உறவுக்கார பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த தேவி கணவரை கண்டித்தார்.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தனது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் தனது பெற்றோரி டம் கூறி அழுதார். உடனே தேவியின் உறவினர்கள் கோவை வந்து அஜித்குமாருக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கைது
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது அஜித்குமார், தனது மனைவி தேவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரத்தினபுரி போலீசில் இரு தரப்பினரும் தனித்தனி யாக புகார் அளித்தனர். தேவி கொடுத்த புகாரின்பேரில் அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர்.
அதுபோன்று அஜித்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேவியின் உறவினர்களான ஜெகநாதன், தங்கபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.