திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் - திமுக நிர்வாகிகள் 4 பேர் சஸ்பெண்ட்

4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்ட்டுள்ளனர்

Update: 2023-03-15 12:31 GMT


திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்