பெண்ணை தாக்கியவருக்கு வலைவீச்சு

திருவேங்கடம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-10-06 19:51 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா உடப்பன்குளம் பஞ்சாயத்து நாரணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகன்கள் கண்ணன் (வயது 45), சரவணகுமார். இவர்களது வீடு அருகருகே உள்ளது. இந்நிலையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக கண்ணனுக்கும், சரவணகுமார் மனைவியான கோட்டைத்தாய் (48) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே கண்ணன், கோட்டைத்தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோட்டைத்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்