சு.ஆடுதுறை ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

சு.ஆடுதுறை ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-05 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள சு.ஆடுதுறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் நேற்று வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது மெயின் ரோட்டில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கழிவறை தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கழிவறை தொட்டியை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கீதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கீதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்