பெயிண்டர் மீது தாக்குதல்

சுந்தராபுரம் அருகே பெயிண்டரை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-24 21:45 GMT


போத்தனூர்


கோவை சுந்தராபுரம், மாச்சம்பாளையம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டி (வயது 40). பெயிண்டர். இவர் சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த குட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெயிண்டரை தாக்கிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்