வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்

வடமாநில தொழிலாளர்களை வாலிபர்கள் தாக்கினர்.

Update: 2023-09-17 21:50 GMT

தா.பேட்டை:

தாக்குதல்

துறையூரை அடுத்த கண்ணனூரில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6 பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டின் அருகில் இளைஞர்கள் சிலர் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இங்கு மது அருந்தக்கூடாது என்று வட மாநில தொழிலாளர்கள் அந்த இளைஞர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வட மாநில தொழிலாளர்களை தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில் (வயது 36), நரேஷ் (32), ராகுல் (23) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா விற்றவர் கைது

*திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் நேற்று கீழ தேவதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த தனுைஷ(20) கைது செய்து, 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

மகன்களுடன் தாய்-நர்சு மாயம்

*திருச்சி பொன்மலைப்பட்டி சாலமன் தெருவை சேர்ந்த கண்ணனின் மனைவி செல்லாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மகன்களுடன் செல்லாயி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

*மணிகண்டத்தை அடுத்த கே.சாத்தனூர் அருகே உள்ள முள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் சரண்யா (22). இவர் இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விடுதியில் தங்கி இருந்து நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரை காணாததால், இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொபட் திருடியவர் கைது

துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த கணேசன்(30), துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ந் தேதி தனது மொபட்டை நிறுவனத்தின் அருகே நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது, மொபட் திருட்டு போயிருந்தது. இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு திருவெறும்பூர் அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்த செல்வம் மகன் ஹரன்குமாைர(19) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்