பெரியதச்சூர் அருகேஇரும்பு கம்பியால் தொழிலாளி மீது தாக்குதல்
பெரியதச்சூர் அருகே இரும்பு கம்பியால் தொழிலாளி தாக்கப்பட்டாா்.
விக்கிரவாண்டி,
பெரியதச்சூர் அடுத்த ரெட்டணை அருகே தொண்டி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு கூலி வேலை பார்த்து வரும் விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துராமனுக்கும் (வயது 48) கப்பூரை சேர்ந்த புருஷோத்தமன் (38) ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த புருஷோத்தமன் இரும்பு கம்பியால் முத்துராமனை தாக்கி உள்ளார். இதனால் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரிய தச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.