மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்

மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்

Update: 2022-09-06 14:11 GMT

கோவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் குடும்பத்தினருடன் தங்கி கட்டி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில், கிருஷ்ணன் நேற்று முன்தினம் வேலை விடுமுறை என்பதால் கோவை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கிருஷ்ணனிடம் தனக்கு மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கிருஷ்ணனை தாக்கினார்.

இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிசென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்