தலைமை ஆசிரியை குடும்பத்தினர் மீது தாக்குதல்

கழுகுமலை அருகே முன்விரோதத்தில் தலைமை ஆசிரியை குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2023-03-11 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே முன்விரோதத்தில் தலைமை ஆசிரியை குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தலைமை ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள முக்கூட்டு மலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி எங்கம்மாள் (வயது 57). இவர் ஒரு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியைாக உள்ளார். இவர்களுக்கு ஜெயலட்சுமி (27) என்ற மகளும், விக்னேஷ் குமார் (24) என்ற மகனும் உள்ளனர்.

இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கணபதிசாமி மகன்கள் சிவகுமார் (50), கோபால்சாமி (55), இவரது மகள் கனகலட்சுமி (27) மற்றும் உறவினர்கள் ராமசுப்பம்மாள் (60), வித்யா (35), ஜெயலட்சுமி (40) ஆகியோரின் குடும்பத்திற்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராமசுப்பம்மாளை, ஜெயலட்சுமி திட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராமசுப்பம்மாளுக்கு ஆதரவாக அவரது உறவினர்களான சிவகுமார், கோபால்சாமி உள்ளிட்டவர்கள் தலைமை ஆசிரியை எங்கம்மாள், அவரது கணவர், மகள், மகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த எங்கம்மாள், ஜெயலட்சுமி, விக்னேஷ்குமார் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஒருவர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிவகுமாரை கைது செய்தார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்