அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

மதுரையில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2023-05-07 19:57 GMT

மதுரை குருவித்துறை அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவரான இவர் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்