சிறுவன் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

சிறுவன் உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-10-12 20:29 GMT

சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கைகாட்டியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவருடைய மகன் சந்துரு (17). இவர் மொபட்டில் தாயனூர் பள்ளக்காடு மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த தோகைமலை மெயின் ரோட்டை சேர்ந்த மாரியப்பன், சந்திரன், சதீஷ், சிவா, அஜித் ஆகியோர் மீது மோதுவது போல் சந்துரு மொபட்டை ஓட்டி சென்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சந்துருவை தாக்கினர். இதை அறிந்த அவரது தந்தை சுதாகர், பாட்டி உஷா ஆகியோர் அங்கு வந்து தட்டிகேட்டுள்ளனர். அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்