தந்தை-மகள் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

பத்தமடை அருகே தந்தை-மகள் உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்ப்பட்டனர்.;

Update:2023-04-14 02:14 IST

சேரன்மாதேவி:

பத்தமடையை அடுத்த கரிசூழ்ந்தமங்கலம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 63). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (48), கிருஷ்ணன் (45) மற்றும் சிலர் நின்று அவதூறாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை வெங்கடாசலம் சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன், கிருஷ்ணன் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 10 பேர் சேர்ந்து வெங்கடாசலம், அவருடைய மகள், தம்பி ஆகியோரை அவதூறாக பேசி, கல் மற்றும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வெங்கடாசலமும், அவருடைய தம்பியும் காரில் மருத்துவமனைக்கு சென்றபோது காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து வெங்கடாசலம் பத்தமடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகன், கிருஷ்ணன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்