2 பேர் மீது தாக்குதல் ஒருவர் கைது

2 பேர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-24 17:02 GMT

மொரப்பூர்:-

கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 39), இவரும், மணியம்பாடி பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (38) என்பவரும் நேற்று இரவு கடத்தூரில் இருந்து ஒடசல்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சென்ற போது மணியம்பாடியை சேர்ந்த தமிழ்வேந்தன் (25), புஷ்பராஜ் (18) ஆகிய இருவரும் முனிரத்தினம், சிவப்பிரகாசம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதி5வு செய்து தமிழ்வேந்தனை கைது செய்தனர். மற்ற ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்