மகேந்திரமங்கலம் அருகே சிகரெட் பிடிப்பதை தட்டி கேட்டதால் பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்

Update: 2023-01-22 18:45 GMT

பாலக்கோடு:

அரூரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 32). இவர் மகேந்திரமங்கலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சீங்காடு கிராமத்தை சேர்ந்த சபரி (32), பெட்ரோல் பங்குக்கு வந்தார். அங்கு எலக்ட்ரிக்கல் அறை அருகே அவர் சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை சாம்ராஜ் தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த சபரி, அங்கிருந்த இரும்பு வாழியால் சாம்ராஜை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சாம்ராஜை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்