மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ஆவலாம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி கமலா (வயது 37). இவர் மொரப்பூரில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாரதி (38), ரூ.300-க்கு கோழி இறைச்சியை கமலாவிடம் வாங்கி உள்ளார். இந்த பணத்தை கொடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கமலா கோழி இறைச்சி வாங்கியதற்கான பணத்தை பாரதியிடம் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தாக்கப்பட்ட கமலா சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மோதல் குறித்து கமலா மற்றும் பாரதி மொரப்பூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் கமலா, பாரதி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.