ஏ.டி.எம். கார்டுடன் ரூ.5 ஆயிரத்தை தவறவிட்ட பெண்
ஏ.டி.எம். கார்டுடன் ரூ.5 ஆயிரத்தை தவறவிட்ட பெண்
தஞ்சை பெரியகோவிலில் தவறிவிட்ட ஏ.டி.எம். கார்டுடன் ரூ.5 ஆயிரத்தை மீட்டு பெண்ணிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர்.
ஏ.டி.எம்.கார்டு-ரூ.5 ஆயிரம்
தஞ்சை பெரியகோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி நேற்றுமாலை நந்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மற்ற பிரதோஷங்களை விட சனிப்பிரதோஷத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி நேற்று சனிப்பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
இந்த சனிப்பிரதோஷத்தில் தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவரும் கலந்து கொண்டார். பிரதோஷம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர். அதேபோல் தமிழரசி வீட்டிற்கு புறப்பட்டபோது அவரது கைப்பை காணவில்லை. அந்த கைப்பையில் ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் இருந்தது. கைப்பையை தவறவிட்ட தமிழரசி வேதனை அடைந்ததுடன் கண்ணீர் சிந்தினார். பின்னர் அவர், பெரியகோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கைப்பை தவறவிட்டது குறித்து புகார் அளித்தார். உடனே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி பார்த்ததுடன், கைப்பையை பக்தர்கள் யாராவது பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
ஒப்படைப்பு
போலீசாரின் தேடுதலில் கைப்பை கண்டெடுக்கப்பட்டு, மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏ.டி.எம். கார்டுடன் ரூ.5 ஆயிரத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு தமிழரசி நன்றி தெரிவித்தார்.