ஏ.டி.எம். அருகே கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த உணவக ஊழியர்

ஏ.டி.எம். அருகே கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த உணவக ஊழியர்

Update: 2022-10-14 17:56 GMT

திருச்சுழி

திருச்சுழி அருகே நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தனது குடும்ப மருத்துவ செலவிற்காக திருச்சுழி போலீஸ் நிலையம் அருகிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.20 ஆயிரம் எடுத்துள்ளார். பின் திருச்சுழி பஜார் பகுதியில் பொருட்களை வாங்குவதற்காக பணம் எடுத்துள்ளார். அப்போது அதில் 5 ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தவறவிட்ட பணத்தை ஏ.டி.எம். மையத்திற்கு வந்து தேடிய நிலையில் பணம் எங்கும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரியும் தியாகராஜன்(38) என்பவர் ஏ.டி.எம். மையம் வழியாக சென்ற போது கீழே கிடந்த 5 ஆயிரம் ரூபாயை எடுத்து உடனடியாக அதனை அருகிலுள்ள திருச்சுழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தநிலையில் பணத்தை தவறவிட்ட ராஜேந்திரன் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றார். தேடிவந்த பணம் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். இதனையடுத்து திருச்சுழி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பால்பாண்டி தலைமையில் தனியார் உணவக ஊழியரான தியாகராஜனின் முன்னிலையில் தவறவிட்டதாக கூறப்படும் ரூ.5 ஆயிரம் ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை ஒப்படைத்து நேர்மையுடன் செயல்பட்ட உணவக ஊழியர் தியாகராஜனை சப்-இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் பாராட்டினர். அப்போது திருச்சுழி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராவித்தம்மாள் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்