ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-11 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அதனுடன் இணைந்த ஏ.டி.எம். ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பனைகுளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஹென்றி என்பவர் 100 ரூபாய் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது பணம் வராததால் அங்கு ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்க சென்றுள்ளார். ஆனால் வங்கி ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து எந்திரத்தை அடித்து உடைத்துள்ளார். இதில் முகப்பு கண்ணாடி சேதமானது. இதுகுறித்து வங்கி மேலாளர் ஏஞ்சலின் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஹென்றியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்