ஏ.டி.எம். மையங்களில் திருட்டை தடுக்க போலீஸ் செல் நம்பருடன் ஸ்டிக்கர்
ஏ.டி.எம். மையங்களில் திருட்டை தடுக்க போலீஸ் செல் நம்பருடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
ஏ.டி.எம். மையங்களில் நாளுக்கு நாள் பல்வேறு மோசடிகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 12 ஏ.டி.எம். மையங்களில் திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் விதத்தில் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை ஏ.டி.எம். மைங்களில் ஒட்டி அம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.