ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் மோசடி
பொன்னமராவதியில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.;
போலியான ஏ.டி.எம். கார்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் சமீப காலமாக தொடர்ச்சியாக பொதுமக்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் திருடப்பட்டு வருவதாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருகிற பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி அசல் ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு போலியான கார்டை அவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். பின்னர் அந்த கார்டை வைத்து ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை திருடி சென்று விடுகின்றனர்.
புகார்
பொன்னமராவதியில் நேற்று சந்தை நடைபெற்றது. அப்போது சந்தைக்கு வந்த சுந்தரசோழபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பதற்காக வந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் பணம் எடுத்து தருவதாக பாக்கியலட்சுமியிடம் கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி ேபாலியான கார்டை அவரிடம் கொடுத்து சென்றுள்ளார். இதற்கிடையே சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி செல்ேபான் எண்ணிற்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து அவர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
கைது
இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயலட்சுமியின் கார்டை மாற்றி பணத்தை திருடியது மதுரையை சேர்ந்த சரவணக்குமார் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஏ.டி.எம். கார்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது மதுரை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளது என்பது தெரியவந்தது. மேலும் தெரியாத நபர்களிடம் தங்களது ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.