மேட்டுகடையில் வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டும்

மேட்டுகடையில் வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டும்

Update: 2023-03-27 11:58 GMT

குண்டடம்

குண்டடம் அடுத்த மேட்டுகடையில் வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது ;-குண்டடம் அடுத்த மேட்டுகடையை சுற்றி எடையபட்டி, நந்தவனம் பாளையம், கொக்கம்பாளையம், வெல்லநத்தம், வேலப்பகவுண்டன்பாளையைம், தும்பலப்பட்டி, குங்குமம்பாளையைம்,வெருவேடன்பாளையம் செம்மேகவுண்டன்பாளையைம்,பெல்லம்பட்டி, முத்துக்கவுண்டன்பாளையம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்களுக்கு மேட்டுக்கடை மையபகுதியாக விளங்கிவருகிறது. இங்கு 2 பெட்ரோல் பங்கு, 2 பெரிய அளவிலான தனியார் மில்ஸ், தேங்காய் பருப்பு களம், மதுபானகடை, பனியன் கம்பனிகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டுவருகிறது இந்தநிலையில் மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே ஒரே தனியார் ஏ டி எம் எந்திரம் உள்ளது அதிக அளவில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதால் இந்த ஏடிஎம் எந்திரத்தில் அவ்வப்போது பணம் எடுத்து விடுவதால் சரிவர பணம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள்அவதிப்பட்டுவருகின்றனர் வணிகர்கள் பணம் எடுகக்வேண்டுமானால் மேட்டுகடைலிருந்து 8 கீ மீ தொலைவிலுள்ள குண்டடம் அல்லது 12 கீ மீ தொலைவிலுள்ள கள்ளிப்பாளையம் செல்லவேண்டியுள்ளது. இதனால் நேரமும் வினாகிறது மேலும் அங்கு செயல்படும் வங்கிகளில் ஒரே நேரத்தில் வாடிக்கையளர்கள் செல்வதால் கூட்டம் அதிகரித்து பணம் எடுக்கவும் செலுத்தவும் முடியாதநிலை ஏற்படுகிறது கோவைலிருந்து மதுரை செல்லும் மெயின் மார்க்கத்தில் மேட்டுக்கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்கள் செல்லவும் மேட்டுக்கடை வந்து செல்லவேண்டியுள்ளது இதனால் இங்கு அதிகஅளவில் மக்கள் போக்குவரத்து இருந்துவருகிறது. இதனால் பொதுத்துறை வங்கி மற்றும் எ டி எம் அமையுமானால் அப்பகுதி பொது மக்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏதுவாக இருக்கும் இப்பகுதியும் விரைவில் வளர்ச்சி அடையும் என இவ்வாறு கூறினார்எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி விரைவாக வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்