ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்-வாணியம்பாடி பிரதான சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 14-ந் தேதி நள்ளிரவு 2 பேர் இன்த ஏ.டி.எம். மோத்திற்கு சென்று அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமி நகரை சேர்ந்த திருமலை (வயது 26), கோனேரிக்குப்பத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர்என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.