செயற்கை நீரூற்றா?...அலட்சிய நீரிழப்பா?...

செயற்கை நீரூற்றா?...அலட்சிய நீரிழப்பா?...

Update: 2023-10-22 10:44 GMT

இது செயற்கை நீரூற்றல்ல..அலட்சியத்தால் ஏற்படும் நீரிழப்பு.சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.ஒவ்வொரு துளி நீரையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.ஆனால் சிறிய கசிவு தானே என்று அலட்சியம் காட்டுவதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது என்பதை அதிகாரிகள் மறந்து விடக்கூடாது.குடிநீருக்காக காலி குடங்களுடன் போராடும் நிலை ஒருபுறமிருக்க..கசியும் நீரையும் சேகரித்து குடிக்கும் நிலையில் ஒருசிலர் உள்ளனர்.எனவே கசிவுகளை சீரமைக்கவும், குடிநீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.(குடிநீர் வீணாகும் இடம் மடத்துக்குளத்தையடுத்த சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பிரிவு)


Tags:    

மேலும் செய்திகள்