ஆத்தூர்நகர பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-26 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் அடையாள அட்டையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் முருகன், துணைத்தலைவர் மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நகர பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்