ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் திருவோண விழா
ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் திருவோண விழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆவணி திருவோண விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள அனந்த பத்மநாபன் சுவாமி சன்னதியில் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.