பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

விழுப்புரம் மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-10-13 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைானத்தில் நடைபெற்றது. இதில் 60 மீ, 100 மீ, 200 மீ, 300 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1,500 மீ, 2,000 மீ, 3,000 மீ, 5,000 மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டியெறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் 14, 16, 18, 20 வயதுக்குட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் 1,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினர்.

பரிசு

இப்போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளின் முடிவில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தடகள சங்க தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, தடகள சங்க செயலாளர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்