மாநில ஜூனியர் தடகள போட்டி
கிருஷ்ணகிரியில், 2-வது நாளாக மாநில ஜூனியர் தடகள போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 14, 16, 18 மற்றும், 20 வயது ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று 2-வது நாள் போட்டி நடந்தது.
இதில், 14 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் சூஜன், ஷர்லின் மக்னுஸ், குண்டு எறிதல் போட்டியில் அபினவ், மினுசனாஜனா, பந்து எறிதல் ேபாட்டியில் பிரின்ஸ் கிருபாகா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அதே போல், 16 வயது பிரிவில், 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் யுவன் சங்கர்ராஜா, 3 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் கமலீஸ், ஈட்டி எறிதல் போட்டியில் ஸ்ரீபாலாஜி, நீளம் தாண்டுதலில் ஆகாஷ், நிஷாந்தினி, உயரம் தாண்டுதலில் பிருந்தா, வட்டு எறிதல் போட்டியில் சாய்கவுரவ், அனுஸ்ரீ, 100 மீட்டர் ஓட்டத்தில் நிஷோக், அபிநயா, சங்கிலி குண்டு எறிதலில் ஹர்ஷவர்தன், 2 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஆகாஷ், பிரக்டிக்யா பன்னா, குண்டு எறிதல் போட்டியில் லிக்னிஸ் ஜோஸ்வா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
மேலும் 18 வயது பிரிவில், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் கவுதமன், தீபிகா, சங்கிலி குண்டு எறிதலில் கீர்த்தி வாசன், காவ்யா ஆகியோரும், 20 வயது பிரிவில், சங்கிலி குண்டு எறிதலில் தினேஷ், நித்யா, கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் ஹரிஹரன், தர்ஷினி ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2 நாட்கள் நடந்த போட்டிகளில், 27 பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.