தர்மபுரி மாவட்ட தடகள போட்டியில் தித்தியோப்பனஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Update: 2022-10-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பென்னாகரம் ஒன்றியம் தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் இந்த பள்ளி மாணவி கோகிலா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த மாணவி மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இதேபோன்று இந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஹரிணி, நவ்யா, வசந்தி, ஜெயப்பிரியா ஆகியோர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்த சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்