பயிற்சி அளிக்க தடகள வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

பயிற்சி அளிக்க தடகள வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-23 19:07 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்க நிலை தடகளம் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. விளையாடு இந்திய மாவட்ட மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதிற்கு உட்பட்ட தடகளம் வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம் விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சி கட்டணம் மட்டுமே வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் வருகிற 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்