ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா

Update: 2022-08-21 13:15 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் நடைபெற்ற ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழாவில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் நிறுவனர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு, கலசங்களில் புனித நீர் ஊற்றியும், தீபாராதனை காட்டியும் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த திரளான பக்தர்களுக்கு பங்காரு அடிகளார் அருளாசி வழங்கினார். முன்னதாக 3-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பங்காரு அடிகளாரின் துணைவியார் லட்சுமி அம்மாள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் மாநில நிர்வாகி ஸ்ரீதேவி ரமேஷ், இளைஞரணி நிர்வாகி அகத்தியர், ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சரஸ்வதி சதாசிவம், மாவட்ட செயலாளர் செல்வராஜ், வெள்ளகோவில் சக்தி பீட தலைவர் ரங்கசாமி மற்றும் இயக்க நிர்வாகிகள் செந்தில்குமார், திருப்பூர் ராயபுரம் என்.ராமகிருஷ்ணன், லட்சுமிநகர் ஆர். சிவானந்தன், ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் மற்றும் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில் பங்காரு அடிகளார் கலந்து கொண்டு, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்