அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாக வதந்தி; 2 பேர் மீது வழக்கு
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாக வதந்தி; 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அருகே உள்ள மேலமையிலாடி பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் (வயது 43). முருகன் (39). இவர்கள் 2 பேரும் வைப்புதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாக வதந்தி பரப்பி உள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுதா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் சுப்பிரமணியன், முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியன் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய துணைத்தலைவராகவும், முருகன் பா.ம.க. கட்சி நிர்வாகி என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.