விளாத்திகுளம் பள்ளியில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
விளாத்திகுளம் பள்ளியில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
எட்டயபுரம்:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை வெள்ளத்தடுப்பு, பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி விளாத்திகுளம் யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மீட்புபணி வீரர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீத்தடுப்பு ஒத்திகையை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.