விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
பெருந்துறை
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கடந்த 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் செல்வக்குமார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஏராளமான தே.மு.தி.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.