வெங்கடாசலபுரம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம்
வெங்கடாசலபுரம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து தலைவர் சண்முகலட்சுமி பேச்சிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினா். முகாமில் இளையரசனேந்தல் கால்நடை உதவி மருத்துவர் பிரவீன் மற்றும் சிறப்பு கால்நடை மருத்துவ குழு மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 90 கறவை பசு, 570 ஆடுகள், 400 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 பேருக்கு விருது மற்றும் கிடேரி கன்று உரிமையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.