பல்வேறு இடங்களில் மது விற்ற 5 பேர் கைது; 445 மது பாட்டில்கள் பறிமுதல்

பல்வேறு இடங்களில் மது விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 445 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-09 22:08 GMT

நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் அதே பகுதியை சேர்ந்த மயில்சாமி (வயது 25) என்பதும், அவர் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மயில்சாமியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் மது விற்றதாக பொன்னான் என்கிற பொன்னுச்சாமி (58) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 88 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டி.என்.பாளையம் அருகே உள்ள குமரன் கோவில் சாலை பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு ஜெ.ஜெ. நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியை சேர்ந்த இனியவன் (42), திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் (42) ஆகியோர் காரில் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்