உடன்குடி பிச்சிவிளையில் திருவிளக்கு பூஜை
உடன்குடி பிச்சிவிளையில் திருவிளக்கு பூஜை நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள பிச்சிவிளை வடக்கு தெருவில் பத்திரகாளியம்மன் ேகாவிலில் ஊர் மக்கள் சார்பில் இந்துஅன்னையர் முன்னணி தலைவி செல்வகுமாரி முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாட்டில் நல்ல கனமழை பொழிந்து, வறுமை நீங்கிட வேண்டியும், இந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். இதில் ஊர் தலைவர் தனம் ஜெயமுருகன், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் அமுதா, வினிதா, சுஜாதா, அன்னம்மாள், அலமேலு, பேச்சியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.