தூத்துக்குடி தொழிற்பயிற்சி மையத்தில்தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழில் பழகுனர்
திறன் மேம்பாட்டுமற்றும் தொழில் முனைவுஅமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழில் பழகுனர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள், அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.
சான்றிதழ்
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கும், இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித் தொகை மாதம் ரூ.7 ஆயிரத்து 700 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடைலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.