துளசி கல்வி குழுமத்தில்சமத்துவ பொங்கல் விழா
வல்லநாடு துளசி கல்வி குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே துளசி கல்வி குழுமத்தின் சார்பில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்து மாணவிகளும் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் ஹூமாயூன் கபீர், இஜாஸ் அகமது ஆகியோர் செய்திருந்தனர்.