திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் நேற்று திருச்செந்தூருக்கு வந்தார். பின்னர் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், விரைவாக பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.