திருச்செந்தூர் கோர்ட்டில் இணைய வழி சட்ட உதவி மையம்
திருச்செந்தூர் கோர்ட்டில் இணைய வழி சட்ட உதவி மையம் திறப்பு விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இணைய வழி சட்ட உதவி மையம் தொடக்க விழா நடந்தது. விழாவில், தூத்துக்குடி மாவட்ட சட்டபணிகள் ஆணையக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான செல்வம் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்ட உதவி ஆணையத்தின் நிர்வாக தலைரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான வைத்தியநாதன் கலந்து கொண்டு திருச்செந்தூர் தாலுகா இணைய வழி சட்ட உதவி மையத்தை திறந்து வைத்து பேசுகையில், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்செந்தூர் வட்ட சட்டபணிகள் குழுவில் வைத்து காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய வழி சட்ட உதவிமையம் செயல்படும்.என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையகுழுவின் உறுப்பினரும் செயலாளருமான மாவட்ட நீதிபதி நசீர் அகமது, தூத்துக்குடி மக்கள் நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வகுமார், தூத்துக்குடி சப்-கோர்ட்டு நீதிபதி பிஸ்மிதா, திருச்செந்தூர் மாஜிஸ்திரேட்டு வரதராஜன், திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துசெல்வி, திருச்செந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் ஜேசுராஜ், மூத்த வக்கீல் சந்திசேகரன், வக்கீல்கள் சங்க செயலாளர் முத்துகுமார் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார் நன்றி கூறினார்.