திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் வழிமுறை நெறிகாட்டி மையம் சார்பில், தனியார் மற்றும் பொதுத்துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு குழு இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கொண்டு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார். பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள், பேராசிரியர் கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வழிமுறை நெறிகாட்டி மைய இயக்குனர் சேகர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்பேரில், வழிமுறை நெறிகாட்டி மைய துணை இயக்குனர் மருதையா பாண்டியன் மற்றும் முதுநிலை பொருளியல் மாணவர்கள் செய்து இருந்தனர்.