குதிரைமொழி சுந்தராச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்ச்சி
குதிரைமொழி சுந்தராச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
உடன்குடி:
குதிரைமொழி சுந்தரநாச்சிஅம்மன் கோவிலில் வருகிற பிப்.12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், இந்து சமய அறநிலையத்துறை நகைசரிபார்ப்பு அதிகாரி வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.