ஊஞ்சலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2022-06-08 15:23 GMT

ஊஞ்சலூர் அருகில் கொளாநல்லி கிராமத்துக்கு உள்பட்ட சத்திரப்பட்டியில் மிகவும் பழமையான திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் கொளாநல்லி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் குடங்களில் புனித நீரையும், கோவில் கலசத்தையும் எடுத்துக்கொண்டு உற்சவ மூர்த்தி, பஞ்ச லோகத்தில் ஆன திரவுபதி அம்மன் சிலையுடன் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக சத்திரப்பட்டி கோவிலுக்கு வந்தனர். மாலையில் முதல் கால யாக பூஜை நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்