கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.73½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்போனது.

Update: 2023-04-28 22:05 GMT

கொடுமுடி

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்போனது.

தேங்காய்

கொடுமுடி அருகே சாலைப்புதூரில் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைெபற்றது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் 15 ஆயிரத்து 820 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இது (கிலோ) ஒன்று குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 26 ரூபாய் 55 காசுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 742 ரூபாய்க்கு விற்பனையானது.

எள்

466 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் கொண்டுவரப்பட்டது. இதில் முதல் தரம் கொப்பரை (கிலோ) ஒன்று குறைந்தபட்ச விலையாக 81 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்சமாக 83 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. இதேபோல் இரண்டாம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்சமாக 79 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. கொப்பரை தேங்காய் மொத்தம் 15 லட்சத்து 44 ஆயிரத்து 780-க்கு விற்பனையானது.

513 மூட்டைகளில் எள் கொண்டு வரப்பட்டது. எள் (கிலோ) ஒன்று குறைந்த பட்ச விலையாக 130 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்சமாக 164 ரூபாய் 10 காசுக்கும் விற்பனையானது. மொத்தம் 56 லட்சத்து 91 ஆயிரத்து 118 ரூபாய்க்கு எள் ஏலம்போனது.

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்து 622-க்கு ஏலம்போனது.

Tags:    

மேலும் செய்திகள்