கயத்தாறு சுங்கச் சாவடியில்சாலை பாதுகாப்பு வார விழா

கயத்தாறு சுங்கச் சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.

Update: 2023-01-11 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சுங்கச்சாவடியை கடந்து சென்ற அனைத்து வாகனங்களும் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுங்கச்சாவடி அலுவலர்கள் செய்திருந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்