கழுகுமலைகழுகாசலமூர்த்தி கோவிலில் பாலாபிஷேக விழா
கழுகுமலைகழுகாசலமூர்த்தி கோவிலில் பாலாபிஷேக விழா வருகிற 12-ந் ேததி நடக்கிறது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருகிற 12-ந்தேதி கார்த்திகை சோமாவாரத்தன்று பாலாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையைச் சுற்றி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பகல் 12 மணியளவில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை ஈஸ்ட் இந்தியா மேச் கோபாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வள்ளிநாயகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.