பஸ் நிலையம் நுழைவு வாயிலில் கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு
உடன்குடியில் பஸ் நிலையம் நுழைவு வாயிலில் கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பஸ் நிலையம் நுழைவு வாயிலில் பழமையான தனியார் கட்டிடம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று காலையில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் பஸ்சுக்கு காத்துநின்ற பயணிகள் அலறியடித்து ஓடினா். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் இடிந்த பகுதியில் யாரும் செல்லாததால் பயணிகள் காயமின்றி தப்பினர். பல ஆண்டுகளாக இந்த கட்டிடம் அபாய நிலையில் இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.