தஞ்சையில், மாநில அளவிலான கேரம் போட்டி
தஞ்சையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13 நாட்கள் மாநில அளவிலான கேரம் போட்டி நடைபெறுகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
தஞ்சையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13 நாட்கள் மாநில அளவிலான கேரம் போட்டி நடைபெறுகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
மாநில கேரம் போட்டி
தஞ்சையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடங்கவுள்ளது. இது குறித்து தஞ்சை மாநகராட்சி மேயரும், மாநில கேரம் கழக தலைவருமான சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடங்க உள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்களுக்கு ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
600 வீரர், வீராங்கனைகள்
ஏற்கெனவே அந்தந்த மாவட்ட கேரம் கழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் சான்றிதழ்கள், கோப்பைகளும் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், உணவு தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழக செயலாளர் சீனிவாசன், தமிழக கிழக்கு மண்டல செயலாளர் மாரியப்பன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.